துபாயில் ஜூலை 7 தொடக்கம் சுற்றுப்பயணிகளுக்கு அனுமதி

துபாய்க்கான சுற்றுப்பயணங்களை அடுத்த மாதம் 7ஆம் திகதியிலிருந்து மீண்டும் ஆரம்பிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுற்றுப்பயணிகளை அதிகம் கவர்ந்து வந்த துபாய், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக முடங்கி இருந்தது. துபாய்க்கு வரும் பயணிகள் பின்பற்றவேண்டிய வழிகாட்டி முறைகளையும் அதன் அரசாங்கம் வெளியிட்டது.

துபாய்க்கு வரும் பயணிகள் கொவிட்-19 நோயால் பாதிக்கப்படவில்லை என்ற சான்றிதழைக் காண்பிக்கவேண்டும் அல்லது விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்குச் செல்லவேண்டும்.

பரிசோதனையின்போது வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அடையாளம் காணப்படுவோர் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர். துபாய்க்குச் செல்வோர் பயணம் செய்வதற்கு 96 மணி நேரத்துக்கு முன் பரிசோதனைகள் செய்திருப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது. 

 

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை