‘ஜி7’ தலைவர்களின் மாநாடு செப்டெம்பர் வரை ஒத்திவைப்பு

இந்த ஆண்டு ஜி7 மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு ஏனைய நாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 “உலக நிகழ்வுகளை பார்க்கும்போது இதில் சரியான பிரதிநிதித்துவம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது மிகவும் காலாவதியான நாடுகளின் குழு” என்று டிரம்ப் ஜி7 மாநாடு பற்றி கூறியுள்ளார். இந்த ஆண்டு அமெரிக்காவால் நடத்தப்படும் ஜி7 நாடுகளில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் நாடுகள் உள்ளன.

இதற்கு ரஷ்யா, தென் கொரியா, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் அழைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜூன் இறுதியில் நடத்தப்பட வேண்டிய இந்த மாநாடு செப்டெம்பர் வரை பிற்போடப்படுவதாக டிரம்ப் கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை ஒன்றிணைத்தே ஜி7 குழு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 06/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை