நாடு முழுதும் ஊரடங்கு; 6 ஆம் திகதி வரை அமுல்

நாடு முழுதும் நேற்று (03) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கிணங்க, இன்று (04) மற்றும் நாளை (05) ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு மதிப்பளித்து ஊரடங்கு சட்டத்தை பின்பற்ற வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனிடையே இன்று அரச அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thu, 06/04/2020 - 10:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை