சிலியில் கணக்கில் சேர்க்கப்படாத 31,400 கொவிட்-19 நோயாளர்கள்

சிலி நாட்டில் கணக்கெடுப்பில் ஏற்பட்ட தவறால் சுமார் 31,400 வைரஸ் பரவல் சம்பவங்கள் மொத்தப் பட்டியலில் வராமல் போனதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுகாதார அமைச்சு செய்த மறுஆய்வின் போது அது கண்டறியப்பட்டது.

மார்ச் மாத நடுப்பகுதியில் அந்தத் தவறு நேர்ந்ததாக அதிகாரிகள் கூறினர். பலருக்கு கொவிட்-19 நோய் பாதிப்பு பற்றித் தகவல் தெரிவிக்கவும் சோதனை முடிவுகளைப் பதிவு செய்யவும் அதிகாரிகள் தவறியதாக அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் ஒருவர் தெரிவித்தார். வைரஸ் பரவல் சம்பவங்களையும் அதனால் ஏற்படும் மரணங்களையும் பதிவு செய்வதற்கான தரநிலைகளை அடிக்கடி மாற்றியதன் தொடர்பில், சிலியின் சுகாதார அமைச்சர் கடந்த வாரம் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

அவர் மருத்துவமனைகளுக்குப் போதுமான சுவாசக் கருவிகள், பாதுகாப்பு ஆடைகள் ஆகியவற்றை வழங்கியதற்காக முன்பு பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலியில் மார்ச் மாதத்திலிருந்து நடப்பில் இருக்கும் நெருக்கடி நிலை கடந்த திங்கட்கிழமை 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. கொவிட்-19 நோயால் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ள தென்னமெரிக்க நாடுகளில் சிலியும் ஒன்று.

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை