ஜப்பானில் 300 பில்லியன் டொலர் நெருக்கடிநேர வரவுசெலவு திட்டம்

கொவிட்-19 வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீண்டுவர ஜப்பான் அறிவித்திருந்த சுமார் 300 பில்லியன் டொலர் மதிப்பிலான வரவு செலவுத் திட்டத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றக் கீழவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அந்தத் தீர்மானம் தற்போது மேலவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது வரும் வெள்ளிக்கிழமைக்குள் சட்ட அங்கீகாரம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானில் வைரஸ் பரவல் குறைவே என்றாலும், பயனீட்டாளர் செலவு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. அதனையடுத்து அறிவிக்கப்படும் அண்மைய வரவுசெலவுத் திட்டத்தில் சிறு தொழில்களுக்கான உதவி, சுகாதார ஊழியர்களுக்கான ரொக்க உதவி போன்றவையும் அடங்கும். ஜப்பானியப் பொருளாதாரம் மீண்டு வர, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40 வீதத்திற்கு ஈடான தொகையை அந்த வரவுசெலவுத் திட்டத்தில் அறிவித்துள்ளார் பிரதமர் ஷின்ஸோ அபே.

ஜப்பானில் 17,251 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 919 பேர் உயிரிழந்துள்ளனர்.

Thu, 06/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை