முடக்க நிலையால் ஐரோப்பாவில் 3 மில்லியன் மரணங்கள் தவிர்ப்பு

ஐரோப்பிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கம் காரணமாக, கொவிட்-19 வைரஸ் தொற்றால் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் மரணமடைவது தவிர்க்கப்பட்டதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட 11 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கத்தை ஆராய்ந்த இம்பீரியல் கொலேஜ் லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இவ்வாறு கூறினர்.

முடக்க நடவடிக்கைகளால், நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து வைரஸ் தொற்றக்கூடிய நபர்களின் எண்ணிக்கை ஒன்றுக்கும் குறைவாக இருந்தது. பொதுவாக, அந்த எண்ணிக்கை ஒன்றுக்கும் அதிகமாகப் பதிவானால், அது வைரஸ் தொற்று பல மடங்கு மோசமடையும் சாத்தியத்தைக் குறிக்கும். கடந்த மாத முற்பாதியில், 12 லிருந்து 15 மில்லியன் மக்கள் அந்த நாடுகளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். முடக்கம் நடைமுறைப்படுத்தப்படாத சூழலின் பாதிப்புடன் ஒப்பிடுகையில், சுமார் 3.1 மில்லியன் பேரின் மரணம் தவிர்க்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை