லா லிகா: ரியல் மெட்ரிட் அணி 3-1 கோல் கணக்கில் இலகு வெற்றி

லா லிகா கால்பந்தாட்ட போட்டித் தொடரின் அய்பார் அணிக்கெதிரான லீக் போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 3--1 என்ற கோல் கணக்கில் இலகு வெற்றியை பதிவு செய்தது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களின்றி நடத்தப்பட்ட இப்போட்டி ஸ்பெய்னின் மெட்ரிட் நகரில் நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே ரியல் மெட்ரிட் அணி ஆதிக்கம் செலுத்தியிருந்தது. போட்டியின் முதல் பாதியில் ரியல் மெட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் பதில் கோலடிக்க அய்பார் அணி எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. 60 ஆவது நிமிடத்தில் அவ்வணியின் பெட்ரோ பிகாஸ் ஆறுதல் கோல் அடித்தார். அதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் ரியல் மெட்ரிட் அணி 3--1 என்ற கோல் கணக்கில் அய்பார் அணியை வீழ்த்தியது.

இப்போட்டியை அடுத்து, நடைபெற்ற மற்றொரு போட்டியில் ரியல் சோசிடேட் மற்றும் ஒசாசுனா அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டி 1--1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ரியல் மட்ரிட் அணி இதுவரை 28 போட்டிகளில் 17 வெற்றி, 8 சமநிலை, 3 தோல்வியுடன் 59 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்வது இடத்தில் உள்ளது. நடப்பு சம்பியனான பார்ஸினா அணி 6-1 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை