நோர்வேயில் பள்ளிவாசலில் சூடு நடத்தியவருக்கு 21 ஆண்டு சிறை

தனது 11 வயது சகோதரியை கொன்றது மற்றும் பள்ளிவாசல் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரி ஒருவருக்கு குறைந்தபட்சம் 14 ஆண்டுகளைக் கொண்டதாக நோர்வே நீதிமன்றம் ஒன்று 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

22 வயதான பிலிப் மன்சவுஸ் என்ற இந்த இளைஞன் கடந்த ஓகஸ்ட் மாதம் தலைநகர் ஒஸ்லோவுக்கு மேற்காக பெரும்மில் உள்ள அல் நூர் இஸ்லாமிய நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

அங்கு பல முறை சூடு நடத்தியபோதும் எவருக்கும் மோசமான காயத்தை ஏற்படுத்தவில்லை. பொலிஸாரின் வருகைக்கு முன்னரே அவர் தடுக்கப்பட்டார்.

இதனை தீவிர வலதுசாரி இனவாத பயங்கரவாதச் செயலாக அடையாளப்படுத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு பின்னர் அந்த இளைஞனின் வீட்டில் 17 வயதான சீனாவில் பிறந்த அவரது சகோதரியின் சடலம் மீட்கப்பட்டது.

Fri, 06/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை