2 மில்லியன் டொலருக்கு: குச்சி மிட்டாய் வாங்க முயன்ற மடகஸ்கார் அமைச்சர் நீக்கம்

பாடசாலை சிறுவர்களுக்கு 2 மில்லியன் டொலருக்கு மேற்பட்ட தொகைக்கு குச்சி மிட்டாய் வாங்குவதற்கு தி;ட்டமிட்ட மடகஸ்கார் கல்வி அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

மடகஸ்கர் ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினா கொரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்த கொவிட்-ஓர்கானிக்ஸ் என்ற மூலிகை மருந்தைப் பரிந்துரை செய்துள்ளார். அது கசப்புமிக்கது.

பாடசாலை பிள்ளைகள் அந்த மருந்தைக் குடிக்கும்போது கசப்புத் தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று குச்சி மிட்டாய்கள் வழங்கத் திட்டமிட்டார் கல்வியமைச்சர் ஜாசோ அட்ரியமனானா.

அதற்காக அவர் அறிவித்திருந்த தொகை இரண்டு மில்லியன் டொலருக்கும் அதிகமாகும். இருப்பினும் ஜனாதிபதி ரஜோலினா அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், கல்வியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மடகஸ்காரில் 1026 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்காக கொவிட்-ஓர்கானிக்ஸ் என்ற மூலிகை மருந்தை பல ஆபிரிக்க நாடுகளும் தொடர்ந்தும் கொள்வனவு செய்து வருகின்றன. எனினும் அந்த மருந்தினால் நோய் குணமடைவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Mon, 06/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை