கொவிட்-19 தொற்றிலிருந்து நியூசி. விடுதலை அறிவிப்பு

கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்

நியூசிலாந்தில் தற்போது கொவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான கிட்டத்தட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன. இதன்படி சமூக இடைவெளி தொடர்ந்தும் தேவையில்லை என்றும் பொது ஒன்றுகூடல்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் நாட்டு எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கடைசி நபர் குணமடைந்து தனிமைப்படுத்தும் இடத்திலிருந்து வீடு திரும்பியுள்ளார். இது புதிய மைல்கல் என்றும் சாதனை என்றும் அந்நாட்டின் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்பீல்ட் கூறினார்.

பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாகக் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து விழிப்புடன் இருப்பது அவசியம் என்று அவர் தெரித்தார்.

நியூசிலாந்தில் கிட்டத்தட்ட 7 வாரங்கள் முடக்கநிலை நடப்பில் இருந்தது. அது கடந்த மாத இறுதியுடன் முடிவடைந்தது.

நோய்ப் பரவலை நியூசிலாந்து கையாண்ட விதம் உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஏறக்குறைய 5 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட நியூசிலந்தில் 1,154 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 22 பேர் உயிரிழந்தனர்.

 

 

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை