‘கொவிட்-19’ பாதிப்பு தரவுகளை நீக்கியது பிரேசில் அரசாங்கம்

பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சனாரோ கொரோனா வைரஸை கையாள்வது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் மாதங்களின் வைரஸ் தொற்று எண்ணிக்கை குறித்த விபரங்கள் அந்நாட்டு அரசாங்க இணையதளத்தில் இருந்து நிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் ஏற்பட்ட நோய்த் தொற்று மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் பற்றிய அறிக்கை மாத்திரமே இனி வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஏனைய நாடுகள் போன்று மொத்த எண்ணிக்கை வெளியிடப்படமாட்டாது.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போதைய நிலையை காட்டுவதில்லை என்று பொல்சொனாரோ குறிப்பிட்டுள்ளார்.

உலகில் நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகம் உள்ள நாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் அண்மைக் காலத்தில் வேறு எந்த நாடுகளை விடவும் அதிக நோய்த் தொற்று மற்றும் உயிரிழப்பு பதிவாகி வருகிறது.

பிரேசிலில் 640,000க்கும் அதிகமான உறுதி செய்யப்பட்ட வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருந்தபோதும் போதிய சோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்நாட்டில் உலகின் மூன்றாவது அதிக உயிரிழப்பாக 35,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். பிரேசில் ஜனாதிபதி, வைரசுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்படும் முடக்க நிலையை நிராகரிப்பதோடு, உலக சுகாதார அமைப்பை பக்கச்சார்பான அரசியல் அமைப்பு என்று குற்றம் சாட்டி அதில் இருந்து விலகுவதாகவும் எச்சரித்துள்ளார்.

Mon, 06/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை