கொவிட்-19: அமெரிக்காவிலிருந்து கோழி இறக்குமதிக்கு சீனா தடை

சீனாவில் தற்போது அதிகரித்து வரும் கொவிட்-19 சம்பவங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில கோழிகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் டைசன் புட் தொழிற்சாலையில் ஏற்பட்ட நோய்த்தொற்றுச் சம்பவங்களைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டது. பீஜிங்கில் உள்ள பெப்சி தொழிற்சாலையையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு ஒரு ஊழியருக்கு நோய்த்தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது உணவு உற்பத்தி, விநியோகம் செய்யும் இடங்களில் இருந்து நோய்த்தொற்று பரவுவதால் தொழிற்சாலையை மூட உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில வாரங்களுக்கு முன்னர் பீஜிங்கில் உள்ள சின்பாடி மொத்த விற்பனைச் சந்தை நோய்த்தொற்றுக் குழுமமாக உருவெடுத்தது. அதனால் சீனாவில் மீண்டும் ஒரு நோய்த்தொற்று அலை எற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அதிகாரிகள் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதுவரை சந்தைக்கு அருகில் உள்ள வட்டாரங்களில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் பேருக்கு கொவிட்-19 மருத்துவச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீஜிங்கில் உள்ள 70 வீதத்திற்கும் அதிகமான இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளன. 

 

 

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை