கொவிட்–19: புதிய தடுப்பு மருந்து பிரிட்டனில் சோதனை

பிரிட்டன் கொரோனா வைரஸ் தொற்றுக்கான புதிய தடுப்பு மருந்தைத் தொண்டூழியர்களிடம் சோதித்துப் பார்க்க ஆரம்பித்துள்ளது. வரும் வாரங்களில் தொண்டூழியர்கள் சுமார் 300 பேர் பரிசோதனையில் பங்கேற்பர்.

லண்டன் இம்பீரியல் கல்லுௗரிப் பேராசிரியர் ரொபின் ஷாட்டாக்கும் அவருடைய குழுவினரும் பரிசோதனையை வழிநடத்துகின்றனர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஏற்கனவே பரிசோதனையை ஆரம்பித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல நாடுகளில் சுமார் 120 தடுப்பு மருந்துகள் சோதித்துப் பார்க்கப்படுகின்றன. பிரிட்டனுக்கும், உலக நாடுகளுக்கும் அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தடுப்பு மருந்தை விநியோகிக்க முடியும் என்று இம்பீரியல் ஆய்வுக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Fri, 06/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை