கொவிட்-19 இரண்டாவது அலை: உலக பங்குச் சந்தைகளில் சரிவு

கொவிட்-19 நோய்த் தொற்று உலகின் பல இடங்களில் இரண்டாம் கட்டமாகப் பரவ ஆரம்பிக்கலாம் என்ற அச்சத்தால், பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183,000க்கு அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

நேற்றுக் காலை தொடங்கியதிலிருந்து, ஆசியப் பங்குச் சந்தைகள் அதன் தாக்கத்தை எதிர்நோக்கின. அமெரிக்கப் பங்கு விலைகள் ஓரளவு ஏற்றம் கண்டுள்ளன, இருப்பினும் வரும் நாட்களில் பங்கு விலைகள் எந்த நிலையில் இருக்கும் என்பதைக் கணிக்கமுடியவில்லை.

ஆசிய பசிபிக், ஐரோப்பியப் பங்குச் சந்தைகளும் நேற்று வீழ்ச்சி கண்டன. இப்போது பல நாடுகள் மீண்டு வந்துள்ளதால், முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் பங்குகளை வாங்க முன்வருகின்றனர். இருப்பினும் இரண்டாம் கட்டப் பரவலால் பாதிப்புகள் மோசமாகும் என்ற அச்சம் தொடர்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  

 

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை