கொவிட்-19; உலக நாடுகளுக்கு சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பு கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள்தோறும் கணிசமாய் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மத்திய அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை உச்சத்தை இன்னும் தொடவில்லை என்று நிறுவனம் குறிப்பிட்டது.

நோய்ப் பரவல் கண்டறியப்பட்டு ஏறக்குறைய ஆறு மாதங்களாகிவிட்ட நிலையில், உலக நாடுகள் அனைத்தும் கவனக்குறைவாக இருப்பதற்கு இது நேரம் அல்ல என்று நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ் கூறினார். கடந்த 10 நாட்களில் 9 நாட்கள் உலகளவில் நாள் தோறும் ஒரு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும், உலக அளவில் சுமார் 136,000 வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

இதுவரை இத்தனை ஆயிரம்பேர் ஒரே நாளில் வைரஸ் தொற்றுக்கு ஆளானது இல்லை என்பதை கெப்ரியேசுஸ் சுட்டிக்காட்டினார்.

அனைத்துலக ரீதியில் நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 மில்லியனைக் கடந்துவிட்டது. இதுவரை 400ஆயிரத்தும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

“கொரோனாவிலிருந்து விடுபட்டு வரும் நாடுகளுக்கு தற்போது இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது சுயதிருப்தி அடைதல்தான். நாம் பாதுகாப்பாகத்தானே இருக்கிறோம் என்ற சுயதிருப்தி என்பது ஆபத்தானது.

உலகளவில் பெரும்பாலான மக்கள் சந்தேகத்துக்குரிய வகையில் கொரோனா பாதிப்புடனே அலைகிறார்கள். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த வைரஸைக் கவனித்து வருகிறோம். எந்த நாடும் கவனக்குறைவாக இருப்பதற்கு இது சரியான நேரம் அல்ல” என்று அவர் எச்சரித்துள்ளார்.

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை