கொவிட்-19: லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் 70,000 பேர் பலி

லத்தீன் அமெரிக்காவை தீவிரமாக தாக்கி இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் அந்தப் பிராந்தியத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 70,000ஐ தாண்டியுள்ளது.

பிராந்தியத்தின் மிகப்பெரிய பொருளாதாரமான பிரேசில், லத்தீன் அமெரிக்காவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருப்பதோடு அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 40,000ஐ நெருங்கியுள்ளது. இது அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு அடுத்து உலகின் மூன்றாவது அதிக உயிரிழப்பாகும்.

பிராந்தியத்தில் வைரஸ் தீவிரமாக பரவி வரும் மற்ற நாடான மெக்சிகோவில் நாளாந்த தொற்று எண்ணிக்கை 4,883 ஆக உயிர்ந்திருப்பதோடு கடந்த புதனன்று மேலும் 708 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி மெக்சிகோவில் 129,184 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 15,357 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் ஆரம்பித்து ஐரோப்பாவை மோசமாக பாதித்த கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய மையப்புள்ளியாக லத்தீன் அமெரிக்கா மாறி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த நோய்த் தொற்று பெரு, சிலி மற்றும் கொலம்பியா நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.

Fri, 06/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை