கொவிட்-19; பாகிஸ்தானில் ஒரே நாளில் 100 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பாகிஸ்தானில் முதல் முறை ஒரே நாளில் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் நேற்று முடிவுற்ற 24 மணி நேரத்திற்குள் கொவிட்-19 தொற்றுக் காரணமாக 104 பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் 4,646 பேர் புதிதாக நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன்படி பாகிஸ்தானில் மொத்தம் 108,316 கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 2,172 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் வைரஸ் தொற்று பாகிஸ்தானில் உச்சம் அடைய வாய்ப்பு இருப்பதாக பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானில் வைரஸ் தொற்று சம்பவங்கள் கடந்த மே இறுதி தொடக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில் எதிர்க்கட்சியினர் மற்றும் மருத்துவ நிபுணர்களின் விமர்சனங்களுக்கு மத்தியிலும் இம்ரான் கான் நாட்டில் முடக்க நிலையை தளர்த்தி வருகிறார். இந்த முடக்க நிலையால் நாட்டின் வறிய மக்கள் மேலும் நெருக்கடிக்கு உள்ளாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை