பெரியநீலாவணையில் சுமார் 18 அடி நீளமுள்ள இராட்சத சுறா

பெரியநீலாவணை பகுதியில் கரைவலை மீன்பிடி வலைக்குள் 18 அடி நீளமுள்ள இராட்சத சுறா மீன் சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று இன்று (21) இடம்பெற்றது.

இது தொடர்பாக தெரியவருவதாவது, இன்று காலை மீனவர்கள் வழமை போன்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் கரையை நோக்கி மீனவர்கள் வலையை இழுக்கும் போது அதிக பாரத்தோடு மிகவும் சிரமப்பட்டு இழுத்துள்ளனர். இந்த நேரத்தில் பிரம்மாண்டமான இராட்சத மீன் ஒன்று கரைவலைக்குள் அகப்பட்டுள்ளதை மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அயலில் நின்ற மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மீனைக் கரைக்கு இழுத்தனர். இதனால் மீனவர்களின் பெறுமாதியான வலை மற்றும் தோணிகள் பாதுகாக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

புள்ளி சுறா மீன் இனத்தைச் சேர்ந்த இந்த மீன் 18 அடி நீளமாக காணப்பட்டதுடன்  சுமார் 2000 கிலோ நிறையுடையது எனவும் 30 இலட்சம் ரூபா பெறுமதி இருக்கலாம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

பெரியநீலாவணை கரைவலை மீனவர்களின் வலையில் மிகவும் பெரிய இராட்சத மீன் சிக்கியது இதுவே முதல் தடவையாகும். பின்னர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் வேண்டு கோளுக்கு அமைய குறித்த இராட்சத சுறா மீன் மீண்டும் பாரிய முயற்சிகளின் பின்னர் கடலுக்குள் விடப்பட்டது.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

Sun, 06/21/2020 - 14:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை