ட்விட்டரில் 140 விநாடி குரல் பதிவுக்கான வசதி

ட்விட்டரில் 140 விநாடிகள் கொண்ட குரல் பதிவிடுவதற்கு புதிய வசதி ஏற்படுத்தப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் ஆப்பிள் கைபேசி சாதனத்தில் இந்த குரல் ட்விட் வசதி சேர்க்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்தின் உற்பத்தி வடிவமைப்பாளர் மாயா பட்டர்சன் மற்றும் சிரேஷ்ட பொறியியலாளர் ரெமி பவுர்கொயின் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டரில் ஏற்கனவே புகைப்படங்கள் மற்று வீடியோக்கள் பதிவிட வசதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் புதிய குரல் பதிவு வசதி அன்ட்ரொயிட் பயன்பாடு கொண்ட கைபேசிகளுக்கு வழங்கப்படுவது குறித்து ட்விட்டர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Fri, 06/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை