கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவருக்கு 1.1 மில்லியன் டொலர் மருத்துவக் கட்டணம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த 70 வயது முதியவருக்கு மருத்துவமனைக் கட்டணமாக 1.1 மில்லியன் டொலர் அறவிடப்பட்டுள்ளது.

வடமேற்கு நகர மருத்துவமனை ஒன்றில் கடந்த மார்ச் 4ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட மைக்கல் பிளோர் என்ற அந்த முதியவர் 62 நாட்கள் அங்கு தங்கி சிகிச்சை பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் மரணத்தை நெருங்கிய நிலையில் மருத்துவர்கள் அவரது குடும்பத்தினருக்கு அது பற்றி அறிவுறுத்தியும் உள்ளனர்.

எனினும் குணமடைந்து மீண்டு வந்த அவர் கடந்த மே 5 ஆம் திகதி மருத்துவமனையை விட்டு வெளியேற தயாரானார். எனினும் அவருக்கு மொத்த 1,122,501.04 டொலர் தொகை கொண்ட 181 பக்க கட்டணச் சீட்டு மருத்துவமனையால் வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியாக மாறியது. எனினும் பிளோரின் அதிர்ஷ்டம் அவருக்கு அரசு மருத்துவ காப்பீடு உதவியது. ஆனால் வரிசெலுத்துவோரின் பணம் தனக்காக பயன்படுத்தப்பட்டது தனக்கு குற்ற உணர்வை உருவாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Mon, 06/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை