மக்களின் ஆர்வமின்றி சீனாவில் 10 நாள் நாய்கறி விழா ஆரம்பம்

சீனாவின் பிரபலமான நாய்க் கறி சந்தை இந்த ஆண்டும் ஆரம்பிக்கப்பட்டபோதும் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெறாததால் விலங்கின ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தென்மேற்கு நகரான யூலினில் நடைபெறும் இந்த 10 நாள் சந்தைக்கு வழக்கமாக ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இங்கு கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் நாய்களை மக்கள் இறைச்சிக்காக கொள்வனவு செய்கின்றனர். எனினும் இந்த ஆண்டு நிகழ்வில் மக்களின் வருகை குறைவாக இருக்கும் என்று விலங்கின ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கொரோனோ வைரஸ் தொற்றை அடுத்து சீன அரசு வனவிலங்கு வர்த்தகத்தை தடை செய்வது மற்றும் செல்லப்பிராணிகளை பாதுகாப்பதற்கான புதிய சட்டங்களை வகுத்திருக்கும் நிலையில் இந்த ஆண்டு நிகழ்வு கடைசி முறையாக இருக்கும் என்று ஆவர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் உள்ள சந்தை ஒன்றில் ஆரம்பமான கொவிட்-19 வைரஸ் தொற்று குதிரைவாலி வெளவாலில் இருந்து மனிதனுக்கு தொற்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

 

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை