1000 ரூபா வழங்குமாறு ஜீவன் வேண்டுகோள்

பிரதமர் முன்பாக கம்பனிகளிடம் கோரிக்ைக

தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1000 ரூபாவை வழங்குமாறு இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தோட்டக் கம்பனிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

700 ரூபாவுக்கு மேலதிகமாக மேலதிகக் கொடுப்பனவு, உற்பத்திக் கொடுப்பனவு மற்றும் வரவுக் கொடுப்பனவு ஆகியவற்றை உட்படுத்தி நாள் சம்பளமாக 1000 ரூபாவை வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கிணங்க தோட்டத் தொழிலாளரின் சில பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் தோட்ட கம்பனி உரிமையாளர்களோடு பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது.  கடந்த சில வருடங்களாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தியுள்ள முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மேற்படி வேண்டுகோள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டுமென கம்பனி உரிமையாளர்களிடம் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க எவ்வித இணக்கப்பாடுமின்றி மேற்படி பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதுடன் எதிர்வரும் 25ம் திகதி இது தொடர்பில் மேலும் ஒரு தீர்க்கமான பேச்சுவார்த்தை நடத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 06/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை