முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு 1 மில். டொலர் பிணை நிர்ணயம்

கறுப்பினத்தவர் மரணம்:

அமெரிக்க கறுப்பின ஆடவர் ஜோர்ஜ் பிளொயிட் மரணத்திற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் அதிகாரி டெரேக் சோவினுக்கு 1 மில்லியன் டொலர் பிணைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிளொயிட்டி மரணம் குறித்து சோவின் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார். செம்மஞ்சல் நிறக் கைதி உடையில் வீடியோ மூலம் அவர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றார்.

நிபந்தனைகளோடு 1 மில்லியன் டொலரும், நிபந்தனைகள் இல்லாமல் 1.25 மில்லியன் டொலரும் அவருக்குப் பிணைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை. பொதுமக்கள், அவர் மீது கடுமையாகச் சினமுற்றுப் போராடி வருகின்றனர். அதனால், அவர் நாட்டைவிட்டுத் தப்பியோடும் சாத்தியம் அதிகம் இருப்பதாகக் கூறி அதிகமான பிணைத் தொகை நிர்ணயிக்குமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

பிணையில் வெளியில் செல்லவேண்டுமானால், சோவின் சில நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும். சட்ட அமுலாக்கப் பணிகளின் எந்த நிலையிலும் அவர் வேலை செய்யக்கூடாது.

துப்பாக்கிகளை, அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது. பிளொயிட்டின் குடும்பத்தாரோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பவை அந்த நிபந்தனைகளில் முக்கியமானவை.

இம்மாத இறுதியில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் இருந்து பிளொயிட்டின் கழுத்தின் மீது, முழங்காலை வைத்து சோவின் அழுத்தியதால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தது வீடியோவில் பதிவானது.

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை