இலங்கை இராணுவ தலைமையகத்தில் 06ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வுகள்

ஜனாதிபதி கோட்டாபய, இந்திய பிரதமர் மோடியின் செய்திகளும் ஒளிபரப்பு

ஆறாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியவை இணைந்து விசேட யோகா அமர்வொன்று நேற்றுமுன்தினம் (21) கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் விசேட செய்திகளும் இந்த நிகழ்வில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவும் பல்வேறு முக்கியஸ்தர்கள், உயரதிகாரிகள் ஏனைய படையினர் ஆகியோருடன் இணைந்து இந்த அமர்வில் பங்கேற்னர். இதேவேளை பாதுகாப்புபடைமேற்கு தலைமையகம் -பனாகொட மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அக்கடமி ஆகியவையும் இந்த அமர்வில் இணையவழி மூலமாக இணைந்திருந்தன

கொவிட்19 எதிர்கொள்வதில் இலங்கை இராணுவத்தினர் முன்னின்று செயற்பட்டிருந்தமைக்காக பாராட்டுகளை தெரிவித்திருந்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, தற்போதைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் மன அழுத்தத்தை குறைப்பதிலும் யோகா மற்றும் ஆயுள்வேதம் ஆகியவை வழங்கிவரும் பங்களிப்பு தொடர்பாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.இன்று உலகளாவிய ரீதியில் இருக்கும் பல மில்லியன் கணக்கான மக்கள் தமது இன, மத, நிற, மொழி வேறுபாடுகள் எதுவுமின்றி யோகா பயிற்சிகள் சிலவற்றை செய்வதன் மூலம் ஆரோக்கியம், மகிழ்ச்சி, சுயம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஞானம்பெறுதல் ஆகியவை சார்ந்த பலன்களை அனுபவிக்கின்றனரெனவும்அவர் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் இலங்கை இராணுவத் தளபதியும், பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவும் உரை நிகழ்த்தினார்.

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை