பாதுகாப்பு அமைச்சின் செயலர் அம்பாறை மாவட்டம் விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான குழுவினர் நேற்று (14) அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு விஷேட விஜயமொன்றை மேற்கொண்டனர்.

தீகவாபி ரஜமகா விகாரைக்கு தனது உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு விஷேட வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டதனைத் தொடர்ந்து இங்கு விஷேட கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்து கொண்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை விரைவில் நீங்கி நாட்டு மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என விஷேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், நாட்டில் சமாதானமும், இயல்பு நிலையும் ஏற்பட வேண்டுமென விஷேட தீபாராதனையும் அட்டாளைச்சேனை தினகரன் நிருபர் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து சவூதி அரேபிய அரசாங்கத்தின் மூலம் கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டு தற்போது பற்றைக் காடுகளால் சூழப்பட்டுக் காணப்படும் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நுரைச்சோலை வீடமைப்புத் திட்டத்தின் நிலைமையினை பாதுகாப்புச் செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், துறைசார் அதிகாரிகளிடம் இவ்வீடமைப்புத் திட்டம் தொடர்பிலான விடயங்களை கேட்டறிந்து கொண்டதுடன் இதுவரை மக்களிடம் இவ்விடமைப்புத் திட்டம் கையளிக்கப்படாமை குறித்தது அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.

Fri, 05/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை