பெர்லின் நகரில் உலகப் போரில் உயிர்தப்பிய முதலை மரணம்

நாஜித் தலைவர் அடொல்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என நம்பப்பட்டு வந்த பெர்லினில் இரண்டாவது உலகப் போரில் உயிர்தப்பிய முதலை ஒன்று மொஸ்கோ மிருகக்காட்சி சாலையில் உயிரிழந்தது.

“வயது முதிர்ச்சி காரணமாக மிசிசிப்பி முதலையான சார்டன் நேற்றுக் காலை உயிரிழந்தது. அது அதிகம் மதிக்கத்தக்க சுமார் 84 வயது உடையதாக இருந்தது” என்று அந்த மிருகக்காட்சி சாலை கடந்த சனிக்கிழமை அறிவித்தது.

அமெரிக்க மிருகக்காட்சி சாலையில் பிறந்த விரைவில் சார்டன் 1936 ஆம் ஆண்டு பெர்லின் மிருகக்காட்சி சாலைக்கு வழங்கப்பட்டது. 1943 குண்டு வீச்சின்போது அது மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பியது.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டன் துருப்புகளால் கண்டுபிடிக்கப்பட்ட அந்த முதலை சோவியட் ஒன்றியத்திடம் வழங்கப்பட்டது.

மிசிசிப்பி முதலைகள் காட்டில் சராசரியாக 30 தொடக்கம் 50 ஆண்டுகளே உயிர்வாழும். இந்நிலையில் சார்டன் உலகின் வயதான முதலையாக இருக்கலாம் என்றபோதும் சைபீரியாவின் பெல்கிரேட் மிருகக்காட்சிசாலையில் 80 வயதுகளில் இருக்கும் முதலை ஒன்று உயிர்வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Mon, 05/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை