பாகிஸ்தான் விமான படையில் முதல் ஹிந்து வீரர்

பாகிஸ்தான் விமான படையில்  முதன் முதலாக  ஹிந்து மதத்தைச் சேர்ந்த  ராகுல் தகவ் என்ற இளைஞர் சேர்ந்துள்ளார்.

சிந்து மாகாணம்  தர்பர்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்  ராகுல் தகவ். பாகிஸ்தான் விமான படை வரலாற்றில்  முதன் முறையாக  சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக  பாக்.  வானொலி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு  ஆசிய வளர்ச்சி வங்கி  அவசர கால கடனாக  2 287 கோடி ரூபாய் வழங்குகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை  மருந்துகள்  முக கவசம்  பாதுகாப்பு ஆடை உள்ளிட்டவற்றை வாங்க  இக்கடன் வழங்கப்படுவதாக  ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. பாக்.  கடந்த மாதம்  சர்வதேச நிதியத்திடம்  10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றது.

Fri, 05/08/2020 - 13:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை