கல்வி நிலையை தோற்கடிக்க ஒருபோதும் இடமளிக்க கூடாது

டிக்கிரி கொப்பேகடுவ கோரிக்கை

நாட்டில் ஏற்பட்ட இரண்டு கலவரங்களுக்கும் முப்பது வருட யுத்தத்திற்கும் முகம் கொடுத்து வெற்றிக்கண்ட இலங்கையின் கல்வி நிலையை கொவிட் 19 தொற்றினால் தோற்கடிப்பதற்கு இடமளிக்கக்கூடாது என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்  போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

1971ஆம் ஆண்டு மற்றும் 1988, 1989ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்களையும், முப்பது வருட யுத்தத்தையும் எதிர்கொண்டு வெற்றி கண்ட இலங்கையின் கல்வி நிலையை கொவிட் 19 தொற்றினால் தோற்கடிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

நாங்கள் பாடசாலைக்கு சென்ற கால பகுதியில், 1971ஆம் ஆண்டு நாட்டில் எற்பட்ட கலவரம் ஒன்றுக்கு எமக்கு முகம் கொடுக்க நேரிட்டது. அதன் பின்பு 1988, 1989 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் மிக பெரிய கலவரங்கள் ஏற்பட்டன. விடுதலைப் புலிகளுடான முப்பது வருட யுத்த காலத்திலும் நாட்டில் கொலை உட்பட பல்வேறு பிரச்சினைகளை ஏற்பட்டன.

இந்த காலப்பகுதியிலும் கூட அரசாங்கத்தின் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து மாணவர்களுக்காக பாடசாலை மற்றும் பல்கலைக்கழகம், உயர் கல்வி நிறுவனம் என்பவற்றின் ஊடாக கல்வியை பெற்று கொடுத்தனர்.

இதற்காக பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம், கல்விமான்கள், புத்தி ஜீவிகள் உட்பட நாட்டு பற்றுடைய மக்கள் அனைவரும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

இவ்வாறு ஒத்துழைப்பை வழங்கியதன் காரணத்தால் இந்நாட்டில் வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்வி அதிகாரிகள் உட்பட மேலும் பலர் கல்வியின் மூலம் வெற்றி கண்டுள்ளார்கள்.

கொவிட் 19 தொற்றின் காரணத்தால் கல்வி நிலையை பாதிப்படைய செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவினர்கள் வழங்கும் ஆலோசனைகளை நேர்மையாக கடைபிடித்து நாட்டின் கல்வித்துறையை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்றார்.

(காவத்தை விசேட நிருபர்)

Wed, 05/13/2020 - 15:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை