சுமந்திரன் போன்ற அரசியல் பிரமுகர்களை தமிழ் மக்கள் களையெடுக்க வேண்டும்

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான்

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் இருந்தும்கூட அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. அன்று இருந்த ரணில் அரசாங்கத்திடம் அதிகாரம் மிக்கவர்களாக இருந்த கூட்டமைப்பினர் நினைத்திருந்தால் அரசியல் கைதிகளை விடுவித்திருக்க முடியும். தேர்தல் காலங்களில் கூட்டமைப்பின் நாடகங்கள் அரங்கேறுவது உண்மையான விடயம்.  சுமந்திரன் போன்ற அரசியல் பிரமுகர்களை தமிழ் மக்கள் களையெடுக்க வேண்டும்.

இவ்வாறு  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். கல்முனை பகுதியில்  புதன்கிழமை(13) முற்பகல்  கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர்  ஊடகவியலாளர் எழுப்பிய  கேள்விக்கு   மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தனது கருத்தில் கூறியதாவது,

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று பிரதமரை சந்தித்துள்ளார்.

உண்மையாக அரசியல் கைதிகள் விடுவிக்கபட வேண்டியவர்கள். அதற்க்காக வேண்டித்தான் நாங்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தோம். அதனை ஒரு கோரிக்கையாக வைத்திருந்தோம். அதனை அவர்களும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

சட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதற்கிடையில் சுமந்திரன் நல்லவர் போன்று பல தியாகங்களை தமிழ் மக்களுக்கு புரிந்தவர் போன்று பிரதமரை சந்தித்து அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும், காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என மனுவை வழங்கியிருக்கிறார். இதனை தமிழ் மக்கள் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்.  

Thu, 05/14/2020 - 10:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை