சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடாத மைக் பென்ஸ்

அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை என்று அவரின் பேச்சாளர் டெவின் ஓ மெலி தெரிவித்துள்ளார்.

பென்ஸ் , கொவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதைச் சோதனை முடிவுகள் காட்டியுள்ளன. அவர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வார் என்று இதற்குமுன் அமெரிக்க ஊடகங்கள் சில கூறியிருந்தன.

எனினும் பென்ஸ் பணிகளைத் தொடர வெள்ளை மாளிகைக்குத் திரும்புவார் என்று ஓமாலி தெரிவித்தார்.

பென்ஸின் மற்றொரு பேச்சாளர் கேட்டி மில்லரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தனிப்பட்ட உதவியாளரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அதைமுன்னிட்டு, டிரம்ப்பும் பென்ஸூம் கொவிட்-19  வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகளை ஒவ்வொருநாளும் மேற்கொண்டு வருகின்றனர். 

Tue, 05/12/2020 - 15:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை