முடக்க நிலைக்கு எதிராக ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் பிரதான நகரங்கள் வழியாக வாகனங்களை செலுத்தியபடியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தீவிர வலதுசாரி வொக்ஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

தலைநகர் மெட்ரிட்டில் ஸ்பெயின் தேசிய கொடியை அசைத்தவாறு தொடரணியாக வாகனங்களை செலுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் பெட்ரோ சான்சேஸை பதவி விலகும்படி அழைப்பு விடுத்தனர்.

ஸ்பெயின் கடந்த மார்ச் 14 ஆம் திகதி தொடக்கம் ஐரோப்பாவில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவந்தபோதும் அண்மைய வாரங்களில் அவை தளர்த்தப்பட்டுள்ளன.

எனினும் நோய்த் தொற்று இன்னும் தீவிரமாக இருக்கும் மெட்ரிட் மற்றும் பார்சிலோனா நகரங்களில் இன்னும் கடும் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன.

எனினும் இந்த முடக்க நிலையால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாக கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவதற்கு தீவிர வலதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Mon, 05/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை