ஐ.ஒ.சி விலை அதிகரிப்பு செய்தாலும் அரசு எரிபொருள் விலையை அதிகரிப்பு செய்யாது

இந்தியன் ஒயில் கம்பனி எரிபொருளின் விலையை அதிகரித்தாலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  எரிபொருளின் விலையை அதிகரிக்கப் போவதில்லையென அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி,போக்குவரத்துச் சேவை முகாமைத்துவ அமைச்சுநேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஒயில் கம்பனி ஒக்டேன் 92 ரக எரிபொருளின் விலையை லீற்றருக்கு 05 ரூபாவால் அதிகரிப்பு செய்துள்ளது. எனினும் சில சமூக ஊடகங்களில் உலக சந்தையில் எரிபொருளின் விலையை குறைத்துள்ள நிலையில் அரசாங்கம் எரிபொருளின் விலையை அதிகரிக்க முடிவுசெய்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஒயில் கம்பனி எரிபொருளின் விலையை அதிகரிக்க எடுத்த தீர்மானம் அந்த கம்பனியினால் எடுக்கப்பட்ட தீர்மானமே தவிர அதற்கும் அரசுக்கும் தொடர்பில்லை.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் எதுவித அடிப்படையும் அற்றவையென்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் அமரவீர, இந்தியன் ஒயில் கம்பனி எரிபொருளின் விலையை அதிகரித்தாலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உற்பத்திகள் விலை அதிகரிப்பு செய்யப்படமாட்டதென்றும் தெரிவித்தார்.

கே. அசோக்குமார்

Wed, 05/20/2020 - 07:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை