தொழிலாளர் தேசிய சங்கத்துக்குள் எவ்வித முரண்பாடுகள் இல்லை

வதந்திகளுக்கு நகுலேஸ்வரன் முற்றுப்புள்ளி

தொழிலாளர் தேசிய சங்கத்துக்குள் முரண்பாடுகள் உச்சம் தொட்டுள்ளதாகவும், உயர்பதவி வகிக்கும் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் வெளியான தகவல்களை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஷ்வரன் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று (24) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

”தொழிலாளர் தேசிய சங்கத்திற்குள் முரண்பாடு நிலவுவதாக சில சர்ச்சைக்குரிய செய்திகள் அண்மைக்காலமாக உலாவி வருகின்ற நிலையில் அது தொடர்பில் தெளிவுபடுத்தலை வழங்கும் பொறுப்பு பொது அமைப்பு என்ற வகையில் சங்கத்துக்கும், கட்சிக்கும் உண்டு. குறிப்பாக எல்லா அமைப்புகளிலும் ஏற்படுவதுபோல கருத்து முரண்பாடுகள் எழும்பட்சத்தில், அவை பேசி தீர்க்கப்படும்.

எனவே, அதனைச் செய்தியாக்கி குளிர்காய எண்ணுவோர், நிச்சயம் தலைகுனிவை சந்திக்க நேரிடும்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் உயர்பீட உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடாத்தவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. ஒழுக்காற்று விசாரணையை நடத்துமாறு கட்சியிலுள்ள உறுப்பினர்கள் எவரும், தலைவரிடமோ, பொதுச்செயலாளரிடமோ இன்னும் கோரிக்கை முன்வைக்கவில்லை.

யாருக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை இடம்பெறவுமில்லை. யாரையும் வழி அனுப்பவும் தயார் இல்லை. சங்கத்தில் இருந்து விடைபெறவும் எவரும் தயார் இல்லை.

கட்சியில் உட்பூசலை ஏற்படுத்தும் நோக்கில் இடைத்தரகர்களால் பரப்பப்பட்ட வதந்திகள் என்பதை உணர்ந்து சங்கத்தின் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு அமைப்பாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Mon, 05/25/2020 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை