சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தில் கொரோனா தொற்று நீக்கிக் கூடம்

கொவிட் 19 தெற்றிலிருந்து சப்ரகமுவ மாகாண மக்களை பாதுகாப்பதற்காக மேற்கத்திய முறை மற்றும் சுதேச விஞ்ஞான முறையை ஒன்றிணைத்து பாதுகாப்பு செயற்முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்றை ஒழிப்பதற்காக சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கத்திய மற்றும் சுதேச மருத்துவ துறைகளை ஒன்றிணைத்து சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் நிறுவப்பட்டுள்ள கொரோனா தொற்று நீக்கி கூடத்தை நேற்றுமுன்தினம் ஆரம்பித்த வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்துத் வெளியிடுகையில்,

சப்ரகமுவ மாகாண சபையில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலிருந்து தொழில் புரியும் அரச சேவையாளர்கள் மற்றும் மாகாண சபைக்கு சேவைகளை பெற்று கொள்வதற்காக நாளாந்தம் வெளி இடங்களிலிருந்து வரும் அரச மற்றும் தனியார்துறையினர்கள் உட்பட பொதுமக்ளை பாதுகாப்பதற்காகவே மாகாண சபை கட்டடத்தொகுதியில் தொற்று நீக்கிக் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

மேற்படி நிறுவப்பட்டுள்ள கொரோனா தொற்று நீக்கி கூடத்தில் மேற்கத்திய விஞ்ஞான முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெப்பமானியும் இணைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சுதேச மருத்து துறையில் தயாரிக்கப்பட்ட தொற்று நீக்கி மருந்து வகைகளும பொது மக்களின் பாவனைக்காக வைக்கப்பட்டுள்ளது என்றார்.

காவத்தை விசேட நிருபர்

Sat, 05/02/2020 - 11:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை