யாழில். கொள்ளையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட ஐவர் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்வேலியில் ஊரடங்கு நேரத்தில் மூன்று வீடுகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டமை மற்றும் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவம் கடந்த முதலாம் திகதி அதிகாலை இடம்பெற்றது. இரண்டு வீடுகளுக்குள் புகுந்த கும்பல் அங்குள்ளவர்களை தாக்கியும் அச்சுறுத்தியும் கொள்ளையில் ஈடுபட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்கரின் கீழான மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் என இரண்டு பிரிவுகளாக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் பல வருடங்களாக கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழாலையைச் சேர்ந்த ஒருவர் மாவட்ட புலனாய்வுப் பிரவினரால் கைது செய்யப்பட்டார். அந்தச் சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரும் இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என கோப்பாய் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்.  அத்துடன் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபரிடமிருந்து கோடாரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.விசேட நிருபர்

Sat, 05/09/2020 - 10:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை