ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று

ரஷ்யா பிரதமர் மிகாயல் மிஷூஸ்டினுக்கு ( Mikhail Mishustin) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

54 வயதுடைய மிகாயல் மிஷூஸ்டின், கடந்த ஜனவரி 16ஆம் திகதி ரஷ்யாவின் பிரதமராக பதவியேற்றிருந்தார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து,  பிரதமர் மிகாயல் மிஷூஸ்டின் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும், சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றுக் காரணமாக ரஷ்ய பிரதமர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டாலும்,  அரசாங்கத்தின் கொள்கைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கும் வேளைகளில்  வீடியோ கான்பிரஸ் மூலம் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், கொரோனா தொற்றுக்குள்ளான பிரதமர் மிகாயல் மிஷூஸ்டின் விரைவில் குணமடைந்து பணிக்குத் திரும்புவார் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், பிரதமர்  மிகாயல் மிஷூஸ்டின் குணமடையும் வரை அவரது பணிகளை துணை பிரதமர் அண்ரீ பிலோசோவ் (Andrei Belousov) மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

ரஷ்யாவில் ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 7 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

Fri, 05/01/2020 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை