கொழும்பு, கம்பஹாவில் மாத்திரம் ஊரடங்கு தொடரும்

கொழும்பு, கம்பஹாவில் மாத்திரம் ஊரடங்கு தொடரும்-CURFEW-Colombo-Gampaha-Till Further Notice-Other Districts Including Kalutara-Puttalam-Daily-8pm to 5am.jpg

- ஏனைய பகுதிகளில் பி.ப. 8.00 முதல் மு.ப. 5.00 வரை தினமும் அமுல்
- கொழும்பு, கம்பஹாவில் திட்டமிட்டபடி நாளை முதல் இயல்பு வழமைக்கு கொண்டு வருதல் இடம்பெறும்

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

களுத்துறை, புத்தளம் உள்ளிட்ட ஏனைய அனைத்து மாவட்டங்களிலும், நாளை, மே 11 திங்கள் முதல் மறு அறிவித்தல் வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மட்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை வழமை நிலைக்கு கொண்டுவருதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு நாளை, மே 11 திங்கள் ஆரம்பமாகும்.

ஆயினும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட அதற்கான நிபந்தனைகளில் மாற்றங்கள் இல்லை எனவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 05/10/2020 - 20:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை