இராணுவத்தினருக்கு மூலிகை பானப்பொதிகள்

அம்பாரை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனமான வெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு நிந்தவூர் ஆயர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையுடன் இணைந்து ஆயர்வேத திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்டநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பானப்பொதிகள் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் மக்களை வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச்செய்யும் நோக்குடன் ஆயுர்வேத திணைக்களத்தினால் பரிதுரைக்கப்பட்ட இந்த மூலிகைப்பானப்பொதிகள் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்து சேவையாற்றிக்கொண்டிருக்கும் இராணுவத்தினருக்கு வழங்கப்படுகின்றது. இதற்கமைய நிந்தவூர் இராணுவ முகாமிலுள்ள படையினருக்கு முதற்கட்டமாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர், அரசசார்பற்ற நிறுவனமான வெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ.எம்.நிஸ்மி, செயலாளர் ஏ.புஹாது, உபதலைவர் பாயிஸ், பிரதிச்செயலாளர் சுலைமான் றாபி, பொருளாளர் பாசித் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு முதற்கட்டமாக நிந்தவூர் அல்-மஸ்லம் வித்தியாலத்தியாலயம், நிந்நவூர் அரச உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கும் இவ் மூலிகைப்பானபொதிகள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்

Mon, 05/04/2020 - 14:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை