சஹ்ரானை கைது செய்யும் நடவடிக்கையை கைவிடுமாறு முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்

முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம்

காத்தான்குடி பள்ளிவாசல் இரண்டுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் தொடர்புடைய  சஹ்ரான் ஹாஷிமை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கைவிடுமாறு அப்போதிருந்த பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்ததாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் உயர் பொலிஸ் அதிகாரி காமினி ரத்னகுமார வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அந்தக் காலப்பகுதியில் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா மூலம் தமக்கு மேற்படி பணிப்புரையை வழங்கியதாக முன்னாள் நீர்கொழும்பு பிரிவுக்கான புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ரத்னகுமார இவ்வாறு ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதற்கான பொலிஸ் மாஅதிபரின் அனுமதி பின்னர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நாலக்க சில்வா மூலம் கிடைத்த போதும் அது தொடர்பில் தமக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்பே அந்த தகவல் கிடைத்ததாகவும் அவர் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

தாம் தற்போது நீர்கொழும்பு பொலீஸ் அதிகாரி அலுவலகத்தில் பணி புரிந்த போதும் 2017 ஆண்டு காலத்தில் தாம் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் கடமை புரிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தகவல்களை தெரிவித்த அவர்,

எவ்வாறாயினும் அந்த சம்பவங்களுக்கு பின் தம்மை பயங்கரவாத விசாரணை பிரிவிலிருந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் இடமாற்றம் செய்ய நாலக்க டி சில்வா நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் ஆணைக்குழு முன்னிலையில் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ்செல்வநாயகம்

Tue, 05/19/2020 - 06:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை