ஜனாதிபதியால் மாத்திரமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

மலையகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மூலமே சாத்தியமாகும் என நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காணரமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள ராணிவத்த, லிந்துல, நாகசேன, குட்டிமலை, என்போல்ட், மெராயா, வூட்லக் அகரகந்த அக்கரபத்தனை உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

நான் அரசியலுக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஜனாதிபதியின் சேவை காரணமாகதான் அவரது வேட்பாளராக இங்கு வந்திருக்கிறேன். கொரோனா பிரச்சினை காரணமாக முழு உலகமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

எமது நாடும் பாதிக்கப்பட்டள்ளது. தோட்டங்கயில் கொரோனா நோயாளர்கள் இல்லாவிட்டாலும் கூட எமது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பலர் வேலையிழந்துள்ளதுடன் எதனையும் செய்ய முடியாத அளவிற்கு பொருளாதார ரீதியாக பின் தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களுக்காக அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுத்து வருகிறது. அதற்கு அப்பால் எம்மால் முடிந்த உதவிகளை செய்வதாகவும் அவர் கூறினார்.

ஹற்றன் விசேட நிருபர்

Sat, 05/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை