சிறுவர்கள், பெண்கள் கடைகளுக்கு செல்வதை முற்றாக தவிர்க்க வலியுறுத்து

கிண்ணியா பிரதேசத்தில் சிறுவர்கள், பெண்கள் கடைத் தெருவுக்குச் சென்று பொருட்களை கொள்வனவு செய்வதை முற்றாக தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கிண்ணியா ஜம்மியத்துல் உலமா  பிரதேச செயலகம் கிண்ணியா நகரசபை, கிண்ணியா பிரதேச சபை, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரிகள், மற்றும் சூறா சபை, பள்ளிவாயல் ஒன்றியம் ஆகியன இணைந்து பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கூட்டான ஊடக அறிக்கை ஒன்றிலே  இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இதனை மீறி கடைகளுக்கு வருகின்றவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி திருப்பி அனுப்புமாறு கடை உரிமையாளர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எதிர்வரும் பெருநாள் தினத்திலோ அதற்குப் பிந்திய தினங்களிலோ கடைத்தெரு, கடற்கரை மற்றும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, பட்டாசு விற்பனை, பட்டாசு பாவனை என்பவற்றை முற்றுமுழுதாக தவிர்க்குமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கிண்ணியா மத்திய நிருபர்  

Sat, 05/16/2020 - 10:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை