ஆதாரமின்றி குற்றம் சாட்டக் கூடாது: அமெரிக்காவுக்கு ஐ.நா. கண்டனம்

‘கொரோனா வைரஸ்  சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் பரவியதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால்  இதற்கான ஆதாரத்தை அமெரிக்கா  இதுவரை தரவில்லை. ஆதாரமின்றி யார் மீதும் குற்றச்சாட்டு கூறக் கூடாது’ என  ஐ.நா.  தெரிவித்துள்ளது.

ஐ.நா. வின் சுகாதார அமைப்பான  உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால நடவடிக்கைகளுக்கான தலைவர் மைக்கேல் ரியான் கூறியதாவது: கொரோனா வைரஸ் உலகம் முழுதும் கோர தாண்டவமாடுகிறது. இந்த நோய்க்கு இதுவரை  2.30 இலட்சம் பேர் பலியாகி விட்டனர். புகார்கொரோனா வைரஸ்  சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான்  முதல் முதலாக பரவத் துவங்கியதாகவும்  அது குறித்த தகவல்களை சீனா மறைத்து விட்டதாகவும்  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்  குற்றம்சாட்டியுள்ளார். . இதற்காக  சீனா மீது நடவடிக்கை எடுக்கும்படி  அமெரிக்க வெளியுறவு அமைச்சர்  மைக் போம்பியோவும் கூறியுள்ளார்

ஆனால்  அதற்கான ஆதாரங்களை உலக சுகாதார நிறுவனம் கேட்டபோது  சீனாவின் செய்தி தொடர்பு துறை போல் செயல்படுவதாக  எங்கள் மீதே  அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான்  கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது என்பதற்கான எந்த ஆதாரத்தையும்  அமெரிக்கா இதுவரை அளிக்கவில்லை.

ஆதாரமின்றி யார் மீதும் குற்றம் சாட்டக் கூடாது. காதில் வந்து விழுந்த செய்திகள் அடிப்படையில்  ஒருவர் மீது குற்றம் சாட்டி  விசாரணை நடத்தி  அது  உண்மை இல்லை என தெரிந்து விட்டால்  வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதை  அமெரிக்கா உணர வேண்டும்.

இது  அறிவியல் பிரச்சினையிலிருந்து மாறி  அரசியல் ரீதியான பிரச்னையாகி விடும். கொரோனா வைரஸ் தொடர்பாக  சீனா  அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆலோசனை கூறினாலும்  அதை உலக சுகாதார நிறுவனம் பரிசீலிக்கும். இவ்வாறு  அவர் கூறினார்.

குஜராத் மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா வைரசை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும்படி  உலகம் முழுதும் உள்ள மருத்துவ நிபுணர்களுக்கு  உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து பரிசோதனை ஆய்வுகளை நடத்தும்படியும் கூறியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று  குஜராத்தில்   அஹமதாபாத்  சூரத்  வதோதரா  ராஜ்கோட் ஆகிய மருத்துவமனைகளிலும்  இந்த பரிசோதனை முயற்சிகளை துவங்கவுள்ளோம். எந்த பிரச்சினையும் ஏற்படாத வகையில்  சர்வதேச அளவில் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில்  இந்த பரிசோதனை நடக்கும்.

Thu, 05/07/2020 - 14:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை