“சீனாவுடனான உறவை துண்டிப்பேன்” டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை

வைரஸ் பரவல் விவகாரத்தால் சீனாவுடனான உறவு மேலும் பாதிக்கப்படக் கூடுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சீன ஜனாதிபதி ஷி சின்பிங்குடன் பேசுவதில் இப்போதைக்குத் தமக்கு ஆர்வமில்லை என்று அவர் குறிப்பிட்டார். சீனாவுடன் தாம் உறவைத் துண்டித்துக்கொள்ளக் கூடுமென்றும் பொக்ஸ் தெலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் டிரம்ப் கூறினார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தத் தவறிய சீனாவின் செயலால், தாம் மிகுந்த அதிருப்தி அடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அவ்வாறு நேர்வதற்கு சீனா ஒருபோதும் அனுமதித்திருக்கக்கூடாது என்றார் அவர்.

ஜனவரி மாதத்தில் சீனாவோடு செய்துகொண்ட வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்ட “மை” உலரும்முன், இந்தப் பிரச்சினை தலையெடுத்ததாகவும் டிரம்ப் கூறினார்.

“சீன ஜனாதிபதியுடன் நல்லுறவு உள்ளது, ஆனால் அவருடன் இப்போதைக்கு பேச விரும்பவில்லை. சீனாவுடன் முழுக்க முழுக்க உறவுகளையே துண்டிக்கலாம், நாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். மொத்தமாக வர்த்தகத்தையே துண்டித்தால் 500 பில்லியன் டொலர்களை சேமிக்க முடியும்” என்று அந்த நேர்காணலில் கூறியிருந்தார். எனினும் அமெரிக்கா ஒரே அடியாக சீனா உடனான உறவை முறித்துக் கொள்ள முடியாது.

காரணம், இன்னமும் அமெரிக்காவின் வர்த்தகத்தில் கணிசமான அளவு சீனாவை நம்பியே உள்ளது. சீனா உடனான உறவு முறிவு அமெரிக்க பொருளாதாரத்தை பயங்கரமாக பாதிக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

Sat, 05/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை