அமெரிக்க கடற்கரைகளில் கவலையின்றி கூடும் மக்கள்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு இலட்சைத்தை நெருங்கும் நிலையில் அந்நாட்டு மக்கள் இந்த வார இறுதி விடுமுறையில் கடற்கரைகளில் பெரும் திரளாக திரண்டனர்.

அமெரிக்க யுத்தங்களில் மரணித்தவர்களை ஞாபகமூட்டும் வார இறுதி நாளில் நாடெங்கும் உள்ள கல்லறைகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டு ஞாபகார்த்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதற்கு மேலதிகமாக கொவிட்-19 தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்த 99,000க்கும் அதிகமானவர்களுக்காகவும் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

“தி நியுயோர்க் டைம்ஸ்” பத்திரிகை வைரஸ் தொற்றால் உயிரிழந்த சுமார் 1000 பேரின் பெயர்களை அதன் முதல் பக்கத்தில் அச்சிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் வைரஸ் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் கட்டங்கட்டமாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நோய்த் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகவும் அமெரிக்கா உள்ளது.

இந்நிலையில் சுகாதார எச்சரிக்கைகள், சமூக இடைவெளியை மதிக்காமலும் முகக் கவசங்கள் அணியாமலும் அமெரிக்கக் கடற்கரைகளில் மக்கள் திரண்டிருப்பது அதிகாரிகளை கவலைகொள்ளச் செய்துள்ளது.

Tue, 05/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை