சவுத் வனராஜா தனியார் தோட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை

ஹட்டன் காசல்ரீ சவுத் வனராஜா தனியார் தோட்டத் தொழி லாளர்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லையென விசனம் தெரிவிக்கின்றனர்.

கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளவர்களுக்கு பல்வேறு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்து டன், முதியோர், நோயாளர் கொடுப்பனவுகளும் வழங்கப்ப ட்டுள்ளன. இக்கொடுப்பனவுகள் முதலாம், இரண்டாம், மூன்றாம் கட்டமென பல தடைவைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், தகுதியான பலருக்கு கிடைக்கவில்லை.

சவுத் வனராஜா தனியார் தோட்ட மக்களுக்கு 5000 ரூபா அரச நிவாரணம் உட்பட எவ்வித நிவாரணங்களும் கிடைக்கவில்லை. அரசி யல் தலைமைகளும் எவ்வித நிவாரணமும் பெற்றுக்கொடு க்கவில்லை.

நிவாரணம் தொடர்பாக கிராம சேவகரிடம் பல தடவைகளுக்கு மேல் சென்று நிவாரணம் தொடர்பில் வினவிய போதிலும் அவர் ஒரு சிலருக்கு அதிமாக தவறி வழங்கியிருப்பதாகவும் அதனை சரிபார்த்தப் பின் பெற்றுத்தருவதாகவும்  தங்களை ஏமாற்றுவதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தோட்டத்தில் வேலை செய்பவர்களில் அதிகமானவர்கள் தினக் கூலிகளாக உள்ளதுடன் அவர்கள் தற்போது தொழிலின்றி இருப்பதாகவும் கடும் வரட்சி காரணமாக தொழிலாளர்கள் வேலையின்றியும் சம்பளமின்றியும் இருப்பதால் ஒரு பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் விசேட நிருபர்

Mon, 05/18/2020 - 13:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை