உலகளாவிய பொருளாதார முறைகளுக்கேற்ப சர்வதேச திட்டங்கள் வேண்டும்

கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஏற்படும் பாதிப்பைப் போக்க உலகளாவிய பொருளாதார முறைகளுக்கேற்ப திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் குறைய பல ஆண்டுகள் ஆகுமென சர்வதேச ரீதியில் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸின் தாக்கம் 2023 வரை உலகை கடுமையாக பாதிக்குமென்றும், உலகின் பல நாடுகள் இதிலிருந்து 2025 க்கு பின் மீளத் தொடங்குமென்றும் கூறப்படுகிறது.

அதற்குள் இலங்கையும் மீண்டு வருவதை ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

நெருக்கடி மோசமடைந்துவிட்டால் நாடு கடுமையான வறுமையை எதிர்கொள்ளும். நாட்டின் கல்வி முறை தொடர்பாகவும் புதிய உலகளாவிய பொருளாதார முறைகளுக்கு ஏற்ற வகையில் சட்ட கட்டமைப்பையும் மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Sat, 05/09/2020 - 09:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை