ஆரம்பித்தவுடன் மூடப்பட்ட கொழும்பு பங்குச் சந்தை

பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்காக ஒன்றரை மாதங்களின் பின்னர் இன்று (11) ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு பங்குச் சந்தையானது அதன் அன்றாட நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளது.

விலைச் சுட்டிகளில் காணப்படும் விரைவான வீழ்ச்சி காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, S&P SL20 சுட்டி அலகு 196.93 புள்ளிகளினால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, முன்னைய பரிவர்த்தனை  தினமான கடந்த மார்ச் 20ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் 10.11 வீதத்தினால் சரிந்துள்ளது.

கொரோனா வைரஸினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக, கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு பங்குச் சந்தையானது, ஒன்றரை மாதங்களின் பின்னர் இன்றையதினம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
 

Mon, 05/11/2020 - 13:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை