ஜெரூசலத்தின் புனித செபல்கர் தேவாலயத்தை திறப்பதில் தாமதம்

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருக்கும் ஜெரூசலம் புனித செபல்கர் தேவாலயம் திட்டமிட்டபடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்க முடியாமல் போயுள்ளது.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தின் பழைய நகரில் இருக்கும் இந்த தேவாலயம் இயேசு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட தலத்தில் அமைந்திருப்பதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான யாத்திரிகர்கள் வருகை தரும் இந்த தேவாலயம் கடந்த மார்ச் 25 ஆம் திகதி மூடப்பட்டது. அது கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அன்றைய தினம் வழிபாட்டாளர்கள் தேவலயத்திற்குள் நுழைவது மறுக்கப்பட்டுள்ளது.

தேவாலயம் திறக்கப்படும் திகதி பிற்போடப்பட்டிருப்பதாக நிர்வாகம் குறிப்பிட்டபோதும் அதற்கான திகதி வெளியிடப்படவில்லை. தேவாலயத்தில் சமூக இடைவெளியை பேணுவதில் உள்ள சிக்கல் காரணமாக தேவாலயத்தை திறப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பல்வேறு ஆலயங்களில் இருந்து 50 மதகுருக்கள் வருவதால் பொதுமக்களுக்கு இடவசதி இல்லாமல் போவதாக அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

 

Tue, 05/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை