வனவிலங்கு வர்த்தகத்தை நிறுத்த சீனாவில் சன்மானம் அறிவிப்பு

சீனாவில் அரியவகை விலங்குகளை வளர்க்காமல் இருக்க விவசாயிகளுக்குப் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பழக்கத்தை முற்றிலும் ஒடுக்க அதிகாரிகள் விவசாயிகளுக்குச் சன்மானம் கொடுக்க இணங்கியுள்ளனர்.

சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் கொவிட்-19 வைரஸ் பரவலுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. உலகளவில் அந்த வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வருகிறது.

சீனாவின் இரு மாநிலங்கள் விவசாயிகளுக்கு எவ்வாறு பணம் வழங்கப்படும் என்ற விபரங்களை வெளியிட்டுள்ளன.

அரியவகை விலங்குகளுக்குப் பதிலாக கால்நடைகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் பணம் வழங்கப்படும். தேயிலை, மூலிகை மருந்துச் செடிகள் ஆகியவற்றையும் அவர்கள் வளர்க்கலாம்.

அரியவகை வனவிலங்குகளைத் திருப்பிக்கொடுப்போருக்குத் தொகை வழங்கப்படும்.

ஒரு கிலோ நல்ல பாம்புக்கு 16 டொலர், ஒரு கிலோ எலிக்கு 10 டொலர் என விலைகளை அதிகாரிகள் நிர்ணயித்துள்ளனர்.

சார்ஸ் நோய்ப் பரவலுக்குக் காரணமாகக் கருதப்படும் புனுகுப் பூனையை வளர்க்காமல் திருப்பிக்கொடுத்தால், அதற்குப் பதில் 84 டொலர் வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையாக கடந்த பெப்ரவரியில் அனைத்து வனவிலங்கு வர்த்தகம் மற்றும் நுகர்வுக்கு சீனா தற்காலிக தடை விதித்தது. எனினும் இது தொடர்பிலான சீனாவின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் இன்னும் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 05/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை