ஹுவாவி நிறுவனம் இலங்கைக்கு தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் அன்பளிப்பு

உலகில் முதற்தர தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவி நிறுவனம் 50 மில்லியன் ரூபா பெறுமதியான 05 தெளிவான வீடியோ மாநாட்டு தொகுதிகள் மற்றும் 06 அதிதொழில்நுட்ப கெமராக்கள் என்பவற்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தது.

குறைந்தபட்ச நபர்களின் பங்களிப்புடன் அரசதுறை முடிவுகளை எடுப்பதை இலகுபடுத்துவதற்காக வீடியோ மாநாட்டு தொகுதியை பயன்படுத்த முடியும். அதி தொழில்நுட்ப கெமராக்கள் மூலம் தெளிவான தரவுகளை வழங்க முடிவதோடு இந்த கெமராக்களினூடாக பிரதான பாதுகாப்பு இடங்களுக்கு அண்டியதாக ஏற்படக்கூடிய ஆபத்தான நிலைமைகளை இலகுவாகவும் விரைவாகவும் அடையாளங்காண முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

170 நாடுகளுக்கும் அதிகமான நாடுகளில் ஹுவாவி நிறுவன தொழில்நுட்ப தின் பல புத்தாக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நெருக்கடியான நிலைமையில் ஹுவாவி நிறுவனம் அளித்து வரும் ஒத்துழைப்பிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஹுவாவி நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி லியாங் யீ உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.(பா)

Tue, 05/05/2020 - 09:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை